Rowlatt Act in Tamil – ரௌலட் சட்டம்

ரௌலட் சட்டம் – Rowlatt Act in Tamil

ரௌலட் சட்டம் ( Rowlatt Act in Tamil ) ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு கொடுமையான சட்டம் ஆகும். இந்த சட்டம் குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகிறது.

இந்த சட்டத்தை கருப்புச் சட்டம் என்றும் அழைக்கின்றனர். இந்த சட்டம் மார்ச் 10 ஆம் தேதி 1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

ரௌலட் சட்டம் ( Rowlatt Act in Tamil ) முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய புரட்சிகளை அடக்கவும் இந்தியர்களின் உரிமைகளை நசுக்கவும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தின்படி எந்த ஒரு இந்தியரையும் பிணை ஆணை இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கலாம். இந்த சட்டம் இந்தியர்களின் பல உரிமையை பறிக்கும் விதமாக அமைந்தது.

இந்த சட்டத்தை மகாத்மா காந்தி மற்றும் அனைத்து தலைவர்களும் இதை கடுமையாக எதிர்த்தனர். காந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜின்னா தனது பேர்ரசின் சட்டமன்ற சபை உருப்பினர் பதவியில் இருந்து விலகினார், தாகூர் 1915 ஆம் வருடம் ஆங்கில அரசு வழங்கியிருந்த knighthood விருதை துறந்தார்.

Rowlatt Act in Tamil
Mahatma Gandhi – Rowlatt Act in Tamil

இந்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கண்டன ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை ரௌலட் சத்தியாகிரகம் ( Rowlatt Act in Tamil ) என்றும் அழைக்கின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்தப் படுகொலையை ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கின்றனர்.  

இந்த துப்பாக்கிச்சூட்டில் 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆங்கிலேய தளபதி ஜெனரல் டயர் என்பவர் ஆணையிட்டார்.

இந்த படுகொலையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களை கண்ட ஆங்கிலேய அரசு ஹண்டர் கமிஷன் என்ற ஒரு ஆணையத்தை இந்த படுகொலையை பற்றி விசாரிக்க அமைத்தது.

ஹண்டர் கமிஷன் ரௌலட் சட்டத்தை திரும்பப் பெறவும் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெனரல் டயரை பதவி விலகவும் பரிந்துரை செய்தது.

ஆங்கிலேயருக்கு ஆதரவானவர்கள் ஜெனரல் டயர்க்கு  பஞ்சாபின் பாதுகாவலர் என்ற வாளும் பரிசளித்தனர் மற்றும் நிதி உதவியும் செய்தனர்.

இந்தப் ரௌலட் சட்டம் ( Rowlatt Act in Tamil ) பதிவை படிப்பதற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பகிரவும்.