Ooty Tourist Place – Botanical Garden , Visiting Time, Fees

ஊட்டி தாவரவியல் பூங்கா


ஊட்டி தாவரவியல் பூங்கா (ooty thavaraviyal poonga) நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டியில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். ஊட்டி (ooty thavaraviyal poonga) வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இந்த பூங்காவிற்கு கண்டிப்பாக வந்து செல்கின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா - ooty thavaraviyal poonga
ஊட்டி தாவரவியல் பூங்கா -(ooty thavaraviyal poonga) 

1848 ஆம் ஆண்டு கட்டிடக்கலை வல்லுநர் கிரஹாம் மக்கில்வோர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பூங்காவை தமிழ்நாடு தோட்டக்கலை துறையால் பராமரித்து வருகிறது. இந்த பூங்கா மொத்தம் 55 ஏக்கர் ஆகும். இந்தப் பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் பொன்சாய் மரங்கள், மூலிகை செடிகள், அழகான புதிர்கள், வெளிநாட்டு செடிகள், பலவகையான பூச்செடிகள் மற்றும் இந்த பூங்காவின் மையப்பகுதியில் 20 மில்லியன் வருடங்கள் பழமையான ஒரு மரம் உள்ளது.

இத்தாலியப்பாணியில் அமைந்த பன்னம் படுக்கைகள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இவை அனைத்தும் கண்கவரும் வண்ணமாக அமைந்துள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா (ooty thavaraviyal poonga) ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்தள தோட்டம், மேல்தள நீருற்றுப்பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், கண்ணாடி வீடு மற்றும் செடி வளர்ப்பகம்.

கீழ்தள தோட்டம்


இந்தப் பகுதியில் புல்வெளிகள் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் 127 வகையான செடிகள் உள்ளன. இந்த இடத்தில் இந்தியாவை பிரதிபலிக்கும் வகையில் பல தாவரங்களை கொண்ட இந்திய வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தோட்டம்


இந்த தோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பிறைவடிவில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் கண் கவரும் வகையில் 300-க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் மற்றும் பலவகையான வெளிநாட்டு செடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இத்தாலியன் தோட்டம்


இந்த தோட்டம் முதலாம் உலகப் போரில் கைது செய்யப்பட்ட இத்தாலிய வீரர்களால் உருவாக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பல வகையான செடிகள் கண் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி வீடு


இங்கு 1912ம் ஆண்டில் செடிகொடிகளை வளர்க்கும் அருமையான கண்ணாடிவீடு கட்டப்பட்டது. இங்கு பலவகையான செடிகொடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்கா பார்வை நேரம் – ooty thavaraviyal poonga visit time


7:00 am – 6:30 pm

ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணம் – ooty thavaraviyal poonga entry fee


குழந்தைகளுக்கு 15 ரூபாய்

பெரியவர்களுக்கு 30 ரூபாய்

கேமரா அனுமதி வாங்க 50  ரூபாய்

வீடியோ கேமரா அனுமதி வாங்க 100  ரூபாய்