ஊட்டி ஏரி – Ooty Lake in Tamil

ஊட்டி சுற்றுலா – Ooty Tour

சுற்றுலா என்றவுடன் தமிழ்நாட்டில் நம் நினைவுக்கு வருவது ஊட்டி ( Ooty ). ஊட்டி நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஊட்டி சுற்றுலா பயணம் ( Ooty tour travel ) மிகவும் பிரபலமானவை. ஊட்டியில் பல சுற்றுலா இடங்கள் ( Ooty tourist Places ) இருக்கின்றன. அவை ஊட்டி ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ரோஜா தோட்டம், தொட்டபெட்டா என்று பல இடங்கள் இருக்கின்றன.  

ஊட்டி செல்வதற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து பேருந்துகள், ஊட்டி மலை ரயில் அல்லது நம் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் மூலமும் செல்லலாம். இதில் ஊட்டி மலை ரயில் மிகவும் ஒரு அற்புதமான பயணமாக இருக்கும். இந்த ரயிலில் செல்வதற்கு நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில் பழங்குடி மக்களும் வாழ்கின்றனர்.

ஊட்டி ஏரி – Ooty Lake in Tamil

நாம் இப்போது இங்கு பார்க்கப் போகும் இடம் ஊட்டி ஏரி ( ooty lake in tamil ). ஊட்டி ஏரி (ooty lake in tamil) மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஊட்டி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இந்த இடத்திற்கு கண்டிப்பாக வந்து செல்கின்றனர்.

ஊட்டி ஏரி வரலாறு – Ooty Lake History

இந்த ஏரியானது செயற்கையாக உருவாக்கப் பட்டதாகும். ஊட்டி ஏரி 1824 ஆம் ஆண்டு  john sullivan என்ற ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. முதலில் இந்த ஏரி மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த ஏரி இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய சுற்றுலா தலமாக மாறியது.

ஊட்டி ஏரியில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள்

இந்த ஏரியில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இங்கு சைக்கிள்  ஓட்டுதல் மிகவும் முக்கியமான ஒரு பொழுதுபோக்காகும். காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு சைக்கிள் ஓட்டுதல் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

இந்த ஏரியில் படகு சவாரியும் ஒரு பொழுது போக்காக உள்ளது. இங்கு படகுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. படகோட்டியின் உதவியுடன் படகு சவாரி மேற்கொள்ளலாம்.

ஏரியின் அருகில் உணவகம் (ooty restaurants) மற்றும் மூலிகை பொருள்கள், எண்ணைகள், துணிகள், கம்பளங்கள் போன்ற பல பொருள்களை இங்கிருக்கும் கடையில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த இடம் மிகவும் பிரபலமான ஊட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

ஊட்டி ஏரி
Ooty lake in tamil

ஊட்டி ஏரி மாசுபடுதல் – Ooty Lake Pollution

இந்த ஏரி இங்கு வரும் சில சுற்றுலா பயணிகள் மாசுபடுத்தப்படுகிறது. அரசாங்கம் இதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது ஆனாலும் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருந்தால் இயற்கையின் அழகை நாம் முழுமையாக பல ஆண்டுகள் அனுபவிக்க முடியும்.

ஊட்டி ( ooty lake in tamil ) வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரிக்கு கண்டிப்பாக வந்து செல்லவும். ஏனெனில் இந்த ஏரி ஒரு மிக அற்புதமாக சுற்றுலா தலமாக விளங்குகிறது.

பார்வை நேரம் – Visiting time for Ooty lake

தினசரி: 10:00 am – 06:30 pm

ஊட்டி ஏரி நுழைவு கட்டணம் – Entry fees for ooty lake

 • இந்தியர்களுக்கு ஒரு நபருக்கு 10 ரூபாய்
 • வெளிநாட்டினர் ஒரு நபருக்கு 560 ரூபாய்
 • கேமரா அனுமதி வாங்க 30  ரூபாய்
 • வீடியோ கேமரா அனுமதி வாங்க 125  ரூபாய்
 • 4 சீட்டர் மிதிவண்டி படகு – 30 நிமிடத்திற்கு – 200  ரூபாய்
 • 2 சீட்டர் மிதிவண்டி படகு – 30 நிமிடத்திற்கு – 160  ரூபாய்
 • 2 சீட்டர் வரிசையில் படகு – 30 நிமிடத்திற்கு – 180  ரூபாய்
 • 8 சீட்டர் மோட்டார் படகு – 20 நிமிடத்திற்கு – 450  ரூபாய்

ஊட்டி ஏரி அருகில் உள்ள கடைகள் – Shop Near Ooty Lake

 • Coffee Shop
 • Thread Garden
 • Eternity chocolate shop
 • Fun Magic shop
 • Garments Plaza
 • F M J Super Market

ஊட்டி ஏரி அருகில் உள்ள உணவகங்கள் – Restruant Near Ooty Lake

 • Ooty Lake View Restaurant
 • Ascot Multi Cuisine Restaurant at Ooty
 • Dhabba Express
 • Haveli Athiti Bhavan
 • மலபார் உணவகம்

ஏரி அருகில் உள்ள தங்கும் விடுதிகள் – Hotels Near Ooty Lake

 • Hotel Lakeview
 • Haveli Athiti Bhavan
 • The Majestic Crown
 • Hotel City Palace
 • ஹோட்டல் மயூரா சுதர்சன்
 • Heaven Holiday Resorts

மேலும் ஊட்டியில் (Ooty Lake in Tamil) உள்ள சிறந்த ஓட்டல்களை பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *