மறையூர் – Marayoor in tamil

மறையூர் – Marayoor in tamil

மூணார் (Marayoor in tamil) கேரளாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. மூணார்  என்று இந்த இடத்திற்கு பெயர் வரக் காரணம் இங்கு மூன்று ஆறுகள் சேருகின்றன. அவை முதிரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி நதிகள் ஆகும்.

தமிழ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. மூணாறு சுற்றுலா இடங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருபவை பச்சை பசுமையான இடங்கள், தேயிலை தோட்டங்கள், கண்கவரும் வண்ணம் படர்ந்திருக்கும் காடுகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், பல விலங்குகள் மற்றும் பறவைகள்.  இந்த இடத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அணைகள், தேசிய பூங்காக்கள், காடுகள், அருவிகள், ஆறுகள் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

மறையூர் (Marayoor in tamil) மிக முக்கியமான சுற்றுலா தலமாக மூணாறு அருகில் உள்ளது. மறையூர் உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மூணாறில் இருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மறையூர் சுற்றியுள்ள பச்சை பசுமையான தேயிலை தோட்டங்கள், காடுகள் மற்றும் பல விலங்குகளும் காணலாம். குறிப்பாக அழிந்துவரும் வரைஆடு இங்கு அதிகமாக காணப்படுகிறது.

கேரளாவில் இங்கு மட்டுமே சந்தனமர காடுகள் உள்ளன. மறையூர் (Marayoor in tamil) இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்க்கும் இடமாக அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு மறையூர் என்று பெயர் வரக்காரணம் இங்குதான்  மகாபாரத இதிகாசத்தின் படி பாண்டவர்கள் இந்த இடத்தில்தான் மறைந்திருந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும்  போன்றவை கற்காலம் மனிதர்கள் வாழ்ந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.

மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து  இயற்கை அழகை கண்டு செல்கின்றனர்.

மறையூர் அருகில் உள்ள தங்கும் விடுதிகள் – Hotels Near Marayoor

Marayoor Tourist Home
Address: Munnar – Udumalpet Road, Opposite St. Marys School, Marayoor PO, Idukki
இந்த விடுதி  மறையூரில் இருந்து 0.3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Vrindhavan Mist City
Address: Kolathamala, Kanthalloor, Munnar – 685620
இந்த விடுதி  மறையூரில் இருந்து 6.7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Shola Heaven
Address: Anaimudi Shola, Kanthaloor P.O, Munnar 685620
இந்த விடுதி  மறையூரில் இருந்து 8.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மறையூர் அருகில் உள்ள உணவகங்கள் – Restaurant near marayoor

  • Sandal Breeze Restaurant
  • Chandana Restaurant
  • TVJ INN And Hotel
  • Happy Land Bakery
  • ALABAR food court hotel

இந்த பதிவை (Marayoor in tamil) படிப்பதற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பகிரவும்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *