Kamarajar history in tamil – காமராசர்


Kamarajar history in tamil -காமராஜர் வரலாறு


காமராசர் (kamarajar history in tamil) தமிழ் நாட்டின் மிக முக்கியமான முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவரது ஆட்சித் தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி என்று கருதப்படுகிறது. காமராசர் தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளமானவை. அதில் இலவச மதிய உணவுத் திட்டம் மிகவும் முக்கியமானது ஆகும். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

kamarajar history in tamil
காமராசர் – kamarajar history in tamil

காமராசர் பிறப்பு – Birth of Kamarajar


1903 ஆம் ஆண்டு விருதுநகரில் ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவருக்கு பெற்றோர் சூட்டியா பெயர் காமாட்சி. அவர் தாயார் மட்டும் “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி காமராசு என்று ஆனது.


காமராசர் பள்ளி படிப்பு – Kamarajar School Studies


இவர் தான் பள்ளி படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. பிறகுகாமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் சேர்ந்தார்.


சுதந்திரப்போராட்டம் காமராசர் பங்கு – Kamarajar history in tamil


காமராசர் (kamarajar history in tamil) பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் மற்றும் சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.

காமராசர் தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டார். பிறகு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.

1942 ஆம் ஆண்டுஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.


அரசியலில் காமராசர் – Kamarajar in Politics


காமராசர் (kamarajar history in tamil) தன் அரசியல் குருவாக சத்தியமூர்த்தியை ஏற்றுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி 1936-ல் பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இவர்கள் முயற்சியில் காங்கிரசு கட்சி பெரும் வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெரு வெற்றி பெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டதும் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றினார். 1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம்.

ராஜாஜி அவர்களே தன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் அவருடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினர் மற்றும் எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பெருவாரியான வாக்குகளை பெற்று காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவி ஏற்று கொண்டார்.

kamarajar history in tamil
காமராசர் சிலை – Kamarajar history in tamil

காமராசரின் அமைச்சரவையின் சிறப்பு – Kamarajar Cabinet Special


காமராசர் (kamarajar history in tamil) அமைச்சரவையின்சில முக்கிய விஷயங்கள் இருந்தன. அவை

  • 8 பேர் கொண்ட அமைச்சரவை.
  • தன்னை எதிர்த்த சி.சுப்பிரமணியம் மற்றும் எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
  • காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகிய இருவரையும்  அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
  • தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறைக்கு  ஒரு அமைச்சரவை உருவாக்கியிருந்தார்.

காமராசர் முதலமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் – Kamarajar as Chief Minister


ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். இவருடைய ஆட்சிக் காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டமே எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.

இந்த திட்டத்தின் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 விழுக்காடில் இருந்து 37 விழுக்காடாக உயர்ந்தது.

இவருடைய ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

காமராசர் (kamarajar history in tamil) காலத்தில் தமிழகத்தில்பல முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டது.அவற்றில் சில

  • இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை(ICF)
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

மற்றும் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது.

9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் இவருடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.


காமராசர் தேர்தல் தோல்வி – Kamarajar Defeat in Tamil


1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார்.


ஏன் காமராசர் King maker ?


இவர் அகில இந்திய காங்கிரசு தலைவராக இருந்த பொது இரு பிரதமர்களை ஆட்சி அமர்த்தினர். நேரு இறந்த பிறகு லால் பகதூர்சாசுதிரியை பிரதமர் ஆக்கினார். லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மறைவாக இந்திரா காந்தியை  பிரதமர் ஆக்கினார். இதன் காரணமாக இவரை kingmaker என்று அழைக்கின்றனர்.


இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு – Miscommunication Between Indira Gandthi and Kamarajar


இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் உடைந்தது. காமராஜர் (kamarajar history in tamil) தலைமையில் சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது.

நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். பிறகு அக்டோபர் 2ஆம் நாள் மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது.

அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.


நினைவு சின்னங்கள் – Kamarajar Memorials in Tamil


சென்னை கிண்டியில் காமராசருக்கு நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் மற்றும் நூலகமும் அமைத்துள்ளது.


காமராசரைப் பற்றிய தலைவர்கள் கருத்து – Other Leaders Comment About Kamarajar


பெரியார்

சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?

நேரு

திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன்.

எம். ஜி. ஆர்

காமராசர் என் தலைவர், அண்ணாஎன் வழிகாட்டி

கலைஞர் மு. கருணாநிதி

தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்.

இந்த பதிவை (kamarajar history in tamil) படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

3 Comments

  1. Pingback: இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி - Sutrula Thalangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *