இந்தியா மாநிலங்கள் – Indian States – 29 states and capitals

இந்தியா மாநிலங்கள்: 29 இந்தியா மாநிலங்கள் ( 
29 states and capitals ) மற்றும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. ஐந்து யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றது. டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்கள் சொந்த அரசாங்கத்தை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.

இங்கு பல மொழிகள் மற்றும் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றது. இந்தியா ஒரு பன்முக தன்மை வாய்ந்த நாடாகும். கீழே இந்திய மாநிலங்கள் எவை என்பதை நாம் காண்போம்.

இந்தியா மாநிலங்கள்
இந்தியா மாநிலங்கள்

இந்தியா மாநிலங்கள்

ஆந்திரப் பிரதேசம் – Andhra Pradesh

ஆந்திரப் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியா நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் எட்டாவது பெரிய மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசம் 62,920 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகர் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் மிகப் பெரிய நகராக விசாகப்பட்டினம் இருக்கிறது. தெலுங்கு, இந்தியாவின் பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகும், ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பான்மையும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும்.

ஆந்திரப் பிரதேசம் பழைய ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து 2 ஜூன் 2014-ஆம் ஆண்டில் தெலுங்கானா பகுதி பிரிக்கப்பட்டபின், இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை அமைக்கப்பட்டுஉள்ளது.

அருணாச்சல் பிரதேசம் – Arunachal Pradesh

அருணாச்சல் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது.

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைகளாக அசாம் மற்றும் நாகாலாந்தின் மாநிலங்களை தெற்கிலும், மேற்கில் பூட்டனுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது, கிழக்கில் மியான்மார் மற்றும் வடக்கில் சீனாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது.

அஸ்ஸாம் – Assam

அஸ்ஸாம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைத்துள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர்.

குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும்.

பீகார் – Bihar

பீகார் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இந்திய நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. பரப்பளவில் பதின்மூன்றுமிகப் பெரிய இந்திய மாநிலமாகும்.

மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய மாநிலமாக இருக்கிறது.வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் பீகார்மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.

பீகார் இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது.

சத்தீஸ்கர் – Chhattisgarh

சத்தீஸ்கர் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் சத்தீஸ்கர்மாநிலத்தின் தலைநகராக இருக்கிறது. இம்மாநிலத்தில் இந்தி மற்றும் சத்தீஸ்கரி மொழி பேசப்படுகிறது.

இம்மாநிலம் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட்,உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

கோவா – Goa

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகோவா இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும். இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. பனாஜி இம்மாநிலத் தலைநகராக மற்றும் வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும்.

கோவா இந்தியாவில் மிக பிரபலமான சுற்றுலா இடமாக விளங்கிறது.கை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.

குஜராத் – Gujarat

குஜராத் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலம் இந்தியாவின் மேற்குப்பகுதியில்அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது.

காந்தி நகர் இம்மாநிலத்தலைநகராக மற்றும் அகமதாபாத் பொருளாதாரத் தலைநகராக விளங்கிறது.

அரியானா  – Haryana

அரியானா ஒரு வட இந்திய மாநிலம் ஆகும். இம்மாநிலம் 1966 ஆம்  ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் விளங்கிறது. அரியானா ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாகவளர்ந்து வருகிறது.

இமாசலப் பிரதேசம் – Himachal Pradesh

இமாசலப் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் 18ஆவதுமாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு,மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள்.

காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலிஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் – Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர் ஒரு வட இந்திய மாநிலம் ஆகும். இம்மாநிலம் இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள்.

ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருபான்மையினராக உள்ளனர் மற்றும் லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது.

ஜார்க்கண்ட் – Jharkhand

ஜார்க்கண்ட் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். ஜார்க்கண்ட் மாநிலம்2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

ராஞ்சி இம்மாநிலத் தலைநகராக மற்றும் ஜாம்ஷெட்பூர் இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். ஜார்க்கண்டகனிம வளம் நிறைந்த மாநிலமாகும்.

கர்நாடகம் – Karnataka

கருநாடகம் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.இம்மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. முதலில் மைசூர் என்று அழைக்கப்பட்டுவந்த இம் மாநிலம் 1973 -இல் கருநாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கேரளம் – Kerala

கேரளா இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தின்எல்லைகளாக தமிழ்நாடு, கருநாடக, அரபுக் கடல் அமைத்துள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் மொழிபேசுவர் அதிகமாக உள்ளனர். மலையாளம் முதன்மையான மொழியாகும். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்உள்ளது. 

மத்தியப் பிரதேசம் – Madhya Pradesh

மத்தியப் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். மத்தியப் பிரதேசத்தின்தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்திஇங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

மகாராஷ்டிரம் – Maharashtra

மகாராட்டிரம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலத்தின் தலைநகர்மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாகவிளங்குவது ஆகும்.

புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில்மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும்.

மணிப்பூர் – Manipur

மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகராகஇம்பால் உள்ளது. இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

மேகாலயா – Meghalaya

மேகாலயா இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். வடகிழக்கு இந்தியாவின் அமைந்தஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.

மிசோரம் – Mizoram

மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள்ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி. இம்மாநிலத்தின்பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள்.

நாகாலாந்து – Nagaland

நாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும்.

ஒரிசா – Odisha

ஒடிசா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது.

பஞ்சாப் – Punjab

பஞ்சாப் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்தது. இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன.

பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்.

ராஜஸ்தான் – Rajasthan

இராஜஸ்தான் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். ஜெய்ப்பூர் இராஜஸ்தாநின் தலைநகராகும். உதயப்பூர், சோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராசஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும்.

இம்மாநிலத்தில் தார் பாலைவனம் உள்ளது. பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது.

சிக்கிம் – Sikkim

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி.

தமிழ் நாடு – Tamil Nadu

தமிழ்நாடு இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.இதன் தலைநகராகச் சென்னை உள்ளது.

தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில்அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.

காமராஜர் பற்றி அறிய இங்கு கிளிக் சேய்யவும்

தெலுங்கானா – Telangana

தெலுங்கானா இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014 முதல் செயல்படத்தொடங்கியது.இதன் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக்கொண்டார். இதற்கு முன் ஆந்திரப் பிரதேசமாநிலத்தின் பகுதியாக தெலங்காணா இருந்தது.

திரிபுரா – Tripura

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும்.

உத்தரப் பிரதேசம் – Uttar Pradesh

உத்தரப் பிரதேசம் இந்தியா மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அதிகமக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும். லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும்.

அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது பெரும்பான்மையாகபேசப்படும் மொழிகள் ஆகும்.

உத்தரகண்ட் – Uttarakhand

உத்தராகண்டம், இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது.

மேற்கு வங்காளம் – West Bengal

மேற்கு வங்காளம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். கொல்கத்தா இம்மாநிலத்தின் தலைநகர். வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி.

சுந்தரவனக்காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.

இந்தியா மாநிலங்கள்: யூனியன் பிரதேசங்கள் –
Total number of union territories in India

இந்தியா மாநிலங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் – Andaman and Nicobar

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும்.

இந்தியா மாநிலங்கள்: சண்டிகர் – Chandigarh

சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது.

இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.

இந்தியா மாநிலங்கள்: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி – Dadra and Nagar Haveli

தாத்ரா & நகர் அவேலி இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஒன்றியப் பகுதிகளில் ஒன்றாகும். இது, குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.

இந்தியா மாநிலங்கள்: தாமன், தியு – Daman & Diu

தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் தமனியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். அருகிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் மொழியான மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்தியா மாநிலங்கள்: லட்சத்தீவுகள் – 
Lakshadweep

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது.

கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும்.

இந்தியா மாநிலங்கள்: தில்லி – Delhi

தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். 

இந்தியா மாநிலங்கள்: புதுச்சேரி – Puducherry

புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி, புதுவை எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

3 Comments

  1. Pingback: இந்திய சுதந்திர தினம் - Independence day - Sutrula Thalangal
  2. Pingback: இந்திய சுதந்திர தினம் - India suthanthira thinam - Sutrula Thalangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *