இந்திய சுதந்திர தினம் – India suthanthira thinam – independence day in tamil

இந்திய சுதந்திர தினம்india suthanthira thinam) ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது விடுதலை அடைந்த நாளை நாம் சுதந்திர தினமாக  ( India suthanthira thinam ) கொண்டாடுகிறோம்.

இந்திய சுதந்திர தினம்
India suthanthira thinam

இந்திய சுதந்திர தினம் ( india suthanthira thinam ) நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. இந்தியா நாட்டில் பல சமூக மக்கள் வாழ்கின்றனர். இந்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பல சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடு.

இந்தியா நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழ், கன்னடம், தெலுங்கு, துலு என பல பழமையான மொழிகளும் உள்ளன. இந்தியா ஒரு மிகவும் பழமையான நாடு ஆகும். இங்கு பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்.

இந்தியாவில் முதலில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். பிறகு ஆரியர்கள் படையெடுத்து இங்கு வந்தனர். அதன் பிறகு அலெக்சாண்டர் இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்தார். அவர் போர்ஸ் என்னும் மன்னரிடம் போர் புரிந்தார்.

பிறகு மௌரியர்கள், குப்தார்கள், இஸ்லாமியர்கள், மொகலயார்கள் மற்றும் பல மன்னர்கள் பல பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். தெற்கே சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் மற்றும் பலர் பல காலங்களில் ஆட்சி செய்துள்ளார்.

பிறகு ஆங்கிலேயர்கள் ( கிழக்கிந்திய கம்பெனி – East India Company ) இந்தியாவை இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அடிமையாகி வைத்திருந்தார்கள்.


கிழக்கிந்திய கம்பெனி


இந்திய வருகை 


இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி ( East India Company in Tamil ) என்ற பெயரில் இந்தியாவை சிறிது சிறிதாக அடிமைப்படுத்தி தனது காலனி நாடாக்கினர்.

இங்கு ஆட்சி செய்யும் அரசர்களிடம் கப்பம் கட்ட வற்புறுத்தினர் அவ்வாறு கட்டாதவர்கள்  யுத்தம் செய்து தூக்கிலிட்டனர்.

இந்த கம்பெனி ( East India Company in Tamil ) இந்தியாவை பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தது. கிழக்கிந்திய கம்பெனி அல்லது ஜான் கம்பெனி இது ஒரு பல பங்குதாரர்களை கொண்ட கம்பெனி ஆகும்.

வணிக அனுமதி பெறுதல்


இந்த கம்பெனி 1600 ஆம் ஆண்டு இந்தியாவை அப்போது ஆட்சி செய்த முகலாய பேரரசர் ஜஹாங்கீர் அனுமதி பெற்று துவங்கப்பட்டது.

முதலில் இந்த கம்பெனி வணிக ரீதியாக மட்டுமே செயல்பட்டு வந்தது. பின்பு முகலாய பேரரசு அவுரங்கசீப் மறைவுக்குப் பின்னர் முகலாய சாம்ராஜ்யம் துவண்டு போனது.

கம்பெனி முதல் வெற்றி


கொல்கத்தாவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி ( East India Company in Tamil ) அங்கு ஆட்சி செய்த வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தவுலா விற்கும் இடையே சண்டை நடந்தது.

முதல் பிளாசிப் போரில் சிராஜ் உத்-தவுலா வெற்றி பெற்றார். பின்பு இரண்டாம் பிளாசிப் போரில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்றது.

கம்பெனி ( East India Company in Tamil )  படைத்தளபதியாக இராபர்ட் கிளைவ் இருந்தார். அவர் தளபதி மீர் ஜாஃபருடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார்.

இச்சதியின் விளைவாக ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் சண்டையின் போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன. ஜாஃபரின் அணிமாற்றத்தால், கிளைவ் எளிதில் வெற்றி பெற்றார்.

கம்பெனி விரிவடைதல்


பிறகு கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸ், மும்பை போன்ற பல இடங்களில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்பு இந்தியாவில் நடந்த சிப்பாய்களின் கழகத்தால் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்த கம்பெனி ( East India Company in Tamil ) 1857ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. பின்பு இந்தியாவை பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.


இந்திய சுதந்திர தினம் – விடுதலை போராட்டங்கள் – Freedom fighters of India


இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு ( East India Company ) எதிராக பலர் 17 முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பல பகுதிகளில் போராடினார்கள். பூலித்தேவன் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார்.

இவர்தான் ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் ஆவார். இதுவே பின்னாளில் நடந்த சிப்பாய் கலகத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்


ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் இவர்கள் இருவரும் மைசூரை தலைமையிடமாக கொண்டு ஆண்டுவந்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு ( East India Company ) மிகவும் நெருக்கடியாக இருந்தவர்கள் இவர்கள்தான்.

இந்திய சுதந்திர தினம்
திப்பு சுல்தான் – இந்திய சுதந்திர தினம் – Independence day in tamil

திப்பு சுல்தான் ஆட்சி செய்யும்போது ஆங்கிலேயர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார். திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணமடைந்தார்.

பழசிராஜா


இதேபோன்று கேரளாவில் பழசிராஜா என்னும் அரசர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார். இவர் அந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களுடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா யுத்தம் புரிந்தார்.

1805 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் சண்டையிடும்போது பழசிராஜா வீரமரணமடைந்தார். பின்னர் இவரது கோட்டையை ஆங்கிலேயர்கள் தரைமட்டமாக்கினார்கள்.

இவரைப்பற்றி நீங்கள் மேலும் அறிய வயநாடு செல்ல வேண்டும். அங்கு இவரது நினைவாக அருங்காட்சியகம், நினைவிடம் ஆகியவை அமைந்துள்ளன.

ராணி வேலு நாச்சியார்


சிவகங்கையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ராணி வேலு நாச்சியார். இவர்தான் ஆங்கிலேயர்களை முதன்முதலில் எதிர்த்த ராணியும் ஆவார். இவரை வீரமங்கை என்றும் அழைக்கின்றனர்.

ஆங்கிலேயர்களிடமிருந்து தனது ஆட்சியை திரும்பப் பெற்றவர்களில் வெகுசிலரில் இவரும் ஒருவர். ஆங்கிலேயரிடமிருந்து வெற்றி பெற்ற பின்பு பத்து ஆண்டுகள் இவர் ஆட்சி புரிந்தார். இவர் தனது 66வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

மருதநாயகம் 


மருதநாயகம் ஆங்கிலேயர்களிடம் சிப்பாயாக சேர்ந்து பின்பு படைத் தளபதியாக உயர்ந்தார். பின்பு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவர் மதுரையில் ஆண்டு வந்தார். இவர் ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றியும் பெற்றார்.

இவரை கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். ஆங்கிலேயர்கள் இவரை சூழ்ச்சியின் மூலம் கைது செய்தார்கள். பின்பு இவரை தூக்கிலிட்டு கொன்றார்கள்.

ஆங்கிலேய தளபதிகள் இவர் மரணித்த பின்னும் இவர் கனவில் வந்து கொல்வது போன்று தோன்றியதால் இவரது உடலை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்தார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 


வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தார். தீரன் சின்னமலை, மருதுபாண்டிய சகோதரர்கள் போன்று பலர் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வந்தனர்.


சிப்பாய் கலகம் – Sepoy mutiny – 
இந்திய சுதந்திர தினம்


சிப்பாய் கலகம் இந்தியா விடுதலை வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

இந்த புரட்சி 1857 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் இதன் முன்னோடியாக வேலூர் புரட்சி கருதப்படுகிறது.

வேலூர் புரட்சி


வேலூர் புரட்சி ஒரு நாள் மட்டுமே நடந்தாலும் 200 ஆங்கிலேய விரர்கள்
கொல்லப்பட்டனர் பலருக்கும் காயம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் பேரும் படை உதவி உடன் இந்த புரட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இந்திய சிப்பாய் பலரையும் தூக்கிலிட்டனார். இந்த புரட்சி திப்பு சுல்தான் வரிசுகளின் தலைமையில் நடந்தது.

மங்கல் பாண்டே


இதன் பிறகு மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பரக்புர் என்னும் இடத்தில் புரட்சி செய்தார். ஆங்கிலேயர்கள் மாடு மற்றும் பன்றி மூலம் செய்த குண்டுகளை பயன்படுத்த கட்டாய படுத்தினார்.

அந்த குண்டுகளை பயன் படுத்த இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் மறுத்தனர். இதன் காரணம் ஆகவே இங்கு சிப்பாய் புரட்சி செய்தனர்.

சிப்பாய் புரட்சி


1857 ஆம் ஆண்டு பல இடங்களில் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்களால் இந்திய சிப்பாய்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகின்றன என்று கூறி இந்த புரட்சி நடந்தது.

இந்த புரட்சி தோல்வி அடைந்தாலும் கிழக்கிந்திய கம்பெனி ( East India Company ) ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த புரட்சி தோல்வி அடைய முக்கிய காரணம் சரியான தலைமை இல்லாததே ஆகும். பல சிறந்த தலைவர் இருந்தும் அவர்கள் தனி தனியே போராடினார்கள்.


1885 – 1947 விடுதலை போராட்டம் –இந்திய சுதந்திர தினம்


இந்திய தேசிய காங்கிரஸ் – Indian National Congress


1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ( Indian National Congress ) என்ற அமைப்பு உருவானது.  உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் போன்ற  தலைவர்கள் தலைமையில் இந்த அமைப்பு உருவானது.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் இந்தியர்களுக்கு அரசியலில் உரிமையை வாங்கித் தருவது. இந்த கலத்தின் போது மிதவாதம், திவரவாதம் என பல முறையில் குழுக்கள் செயல் பட்டு வந்தன.

வங்காளம் பிரிவினை


1905 ஆம் ஆண்டு வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்தியர்கள் சுதேசி என்ற ஆங்கில பொருள்களை நிராகரிக்கும் போராட்டங்களை நடத்தினர். முஸ்லிம் லீக் என்ற அமைப்பு 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த அமைப்பு இஸ்லாமிய மக்களின் உரிமையை காக்க உருவாக்கப்பட்டது. பின்பு இதே ஆண்டு காங்கிரஸ் கட்சி  சுயாட்சி உரிமையை வைத்தது.

பின்பு கொல்கத்தாவில் இருந்த தலைமையகத்தை டெல்லிக்கு ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். 1914  முதல் 1918 வரை முதல் உலகப்போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியர்களை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள்.


காந்திஜி வருகை


1915 ஆம் ஆண்டு காந்திஜி (Gandhiji) அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து ஆமதாபாத்தில் ஆசிரமம் அமைத்தார். இந்திய வரலாற்றில் 1919 ஆம் ஆண்டு ஒரு கருப்பு வருடமாக கருதப்படுகிறது.

ரௌலட் சட்டம் – Rowlatt Law in Tamil


1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்த ஒரு இந்தியரையும் தீவரவாதி என சந்தேகித்து கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம்.

இந்த சட்டத்தை நாடு முழுவதும் அனைத்து இந்தியர்களும் எதிர்த்தனார். இதை எதிர்த்து இந்தியர்கள் எப்ரல் 13 அன்று பஞ்சாப்பில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அமைதியாக போராடினார்.

அப்போது ஆங்கிலேய தளபதி ஜெனரல் டையர் திடீரென்று துப்பாக்கி சூட்டிற்கு ஆணையிட்டார். அப்போழுது 400க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டனர் மற்றும் 1200 மேற்பட்ட காயம் அடைந்தனார்.

இந்த சம்பவத்தின் விளைவாக டையர் பதவில் இருந்து விலக்கப்பட்டார். இந்தியார்களின் கடும் எதிர்பால் 1922 ஆம் ஆண்டு இந்த சட்டம் திரும்பப் பெற்றனார்.

ஒத்துழையாமை இயக்கம்


இந்திய சுதந்திர வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இயக்கம் ஒத்துழையாமை இயக்கம் ( non cooperation movement in tamil ). இந்தியா 200-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தது.

ஆங்கிலேயர்களை எதிர்க்க காந்திஜி அவர்கள் முன்னெடுத்த முக்கியமான இயக்கங்களில் ஒத்துழையாமை இயக்கம் மிக முக்கியமானவை.

non cooperation movement in tamil
காந்திஜி – non cooperation movement in tamil

இந்த இயக்கத்தின் நோக்கம் ரௌலட் சட்டம் திரும்பப் பெறுதல், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நியாயம் பெறுதல் மற்றும் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை அதிகரித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு இந்த இயக்கம் தோன்றியது.

ஒத்துழையாமை இயக்கத்தின் படி இந்தியர்கள் அனைத்து அரசு பணிகளையும் புறக்கணித்தல், பள்ளிக்குச் செல்ல மறுத்த மற்றும் ஆங்கிலேயர் துணிகளை புறக்கணித்தல் போன்ற வழியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கத்தை ( non cooperation movement in tamil ) காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரிய தலைவர்கள் ஆதரிக்கவில்லை ஆனாலும் இளம் தலைவர்கள் இந்த போராட்டத்தை மிகவும் கடுமையாக முன்னெடுத்தனர்.

ஒத்துழையாமை இயக்கம் ( non cooperation movement in tamil ) நாடெங்கும் பரவியது. இந்த இயக்கத்தால் காந்திஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் மிகவும் முக்கியமான தலைவராக மாறினார்.

இந்த இயக்கம் பின்னாளில் காந்திஜி அவர்களாலேயே வலுவிழந்தது. இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.

பிப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் பல விடுதலை இயக்கத்தினர் படுகாயமடைந்தனர்.

இதன் பின்னர் நடைபெற்ற காவல்துறையினர் மீதான தாக்குதலில் 27 காவல்துறையினர் கொல்லப்பட்டனர் காவல் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.  பிறகு இந்த வன்முறை நாடெங்கும் பரவியது.

இந்த வன்முறையின் காரணமாக
காந்திஜி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத்
( non cooperation movement in tamil ) திரும்பப் பெற்றார்.

இந்த ஒத்துழையாமை இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய காந்திஜி அவர்கள் மூன்று வாரங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இந்த போராட்டத்தின் விளைவாக ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் வலுவிழந்தது.

ஆனால் காந்திஜியின் இந்த செயலுக்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆங்கிலேயர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் ( non cooperation movement in tamil ) போராட்டத்தில் ஈடுபட்டதால் காந்திஜி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வட்டமேசை மாநாடு


காந்திஜி (Gandhiji) 1930 ஆம் ஆண்டு உப்புச்சத்தியாகிரகம் அறிவித்தார். இதன் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி அளித்தல். முதல் வட்டமேசை மாநாடு இந்தியர்கள் புறக்கணித்தனர்.

1931 ஆம் ஆண்டு இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்திஜி
(Gandhiji) கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் காந்தி – இரவின் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

பூனா ஒப்பந்தம்


இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயர்கள் வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்று முடிவு செய்தனர். இதன் படி இந்துகள், ஆங்கிலேயர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என அனைத்து மக்களுக்கு தனி தொகுதி வழங்க முடிவு செய்தனர்.

இதை அம்பேத்கர் ஆதரித்தார் ஆனால் காந்திஜி இதை கடுமையாக எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமானதால் அம்பேத்கர் தன் முடிவை மாற்றி கொண்டார்.

இதை அடுத்து 1932 ஆம் ஆண்டு காந்திஜி (Gandhiji) மற்றும் டாக்டர் அம்பேத்கர் சேர்ந்து பூனா ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி தீண்டாமையை ஒழிக்கும் மற்றும் தலித் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தரவும் இந்த அமைப்பு நிறைவேற்றப்பட்டது.

1935ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு அரசியல் உரிமை அளிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு நேதாஜி அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிடும் படையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படையை திரட்டினார்.

வெள்ளையனே வெளியேறு


வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு நடைபெற்றது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்திஜி அவர்கள் அறிவித்தார். செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை காந்திஜி அவர்கள் அறிவித்தார். இந்த இயக்கத்தை ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இயக்கத்தின் நோக்கம் ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது.

இதை தொடர்ந்து இந்த  இயக்கத்தில் கலந்து கொண்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. இந்த இயக்கத்தை ஓராண்டுக்குள் ஆங்கிலேயர் அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கிவிட்டது.

இந்திய தேசிய ராணுவம்


1943 ஆம் ஆண்டில் நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இந்த ராணுவத்தைக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட இந்தியாவை நோக்கி வந்தார். ஆனால் இம்பால் என்ற இடத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தொழிலாளர் கட்சி


1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவில் தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சியை பிடித்தது. அவர்கள் இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதாக முடிவு செய்தனர்.

இந்து-முஸ்லீம் இடையே கலவரம்


பின்பு 1946ஆம் ஆண்டு காந்திஜி மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்தியாவில் இந்து-முஸ்லீம்  இடையே கலவரம் மூண்டது இந்த கலவரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.


இந்திய சுதந்திர தினம்


1947 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் என்ற நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பல போராட்டங்களுக்கு பிறகு நமக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை அளித்தனர். காந்திஜி, நேதாஜி மற்றும் பல தலைவர்களின் பல வடிவிலான போராட்டங்களின் காரணமாக ஆங்கிலேயர்கள் நமக்கு ஆகஸ்ட் 15 இல் விடுதலை அளித்தனர். 

இந்திய சுதந்திர தினம்
காந்திஜி – இந்திய சுதந்திர தினம் – Independence day in tamil

இந்திய சுதந்திர தினம் ( Independence day in tamil ) அடைந்தது நேரு அவர்கள் பிரதமராக பதவியேற்றார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார்கள்.


ஆங்கிலேயர்கள் நமக்கு விடுதலை அளித்ததற்கு வேறு சில காரணம்


ஆங்கிலேயர்கள் நமக்கு விடுதலை அளித்ததற்கு இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஆங்கிலேயர்கள் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தனர்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை ஆள்வதற்கு அப்போது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவற்றின் காரணமாகவும் இந்தியாவிற்கு விடுதலை அளித்ததாக கூறப்படுகிறது.


இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏன்?


இந்திய சுதந்திர தினம் ( Independence day in tamil ) ஆகஸ்ட் 15 (August 15) ஆம் தேதி கொடுக்கப்பட்டதிற்கு ஒரு காரணம் உள்ளது. இந்திய சுதந்திர தினம் தேதி முடிவு சேய்தது Lord Mountbatten ஆகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி Lord Mountbatten க்கு மிகவும் அதிர்ஷ்டம் மான நாள் ஆகும்.

இந்திய சுதந்திர தினம்
தேசிய கொடி – இந்திய சுதந்திர தினம் – Independence day in Tamil

ஏனெனில் இரண்டாம் உலகப் போர்றில் Lord Mountbatten தலைமையில் ஆனா படையிடம் ஜப்பானியர்கள் சரணடைந்தனர் இந்த நாளில் தான்.

ஆனால் ஆகஸ்ட்15 தேதி நல்லா நாள் இல்லை என ஜோதிடர்கள் கூறினார். Lord Mountbatten தன்னுடைய முடிவில்  பிடிவாதமாக இருந்தார். இதன் காரணமாக ஆகஸ்ட் 15 தேதி நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

ஹிந்து முறைப்படி சூரிய உதயமே ஒருநாளின் தொடக்கம் ஆகும். இதன் அடிப்படையில் தான் நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.


இந்தியா உடைந்தது – India Partition


இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் என்று ஒரு தனி நாடு இஸ்லாமியர்களுக்கு என்று வழங்கப்பட்டது.

இந்திய சுதந்திர தினம்
இந்திய சுதந்திர தினம் –
இந்தியா – பாகிஸ்தான்

முகமது அலி ஜின்னா தலைமையில் பாகிஸ்தான் பிரிந்து சென்றது. முகமது ஜின்னா தலைமை வகித்த முஸ்லிம் லீக் இரண்டாக உடைந்தது.

இந்திய சுதந்திர தினம்
முகமது அலி ஜின்னா – 
காந்திஜி – இந்திய சுதந்திர தினம்

முஹம்மத் அலி ஜின்னா முடிவில் மாற்றம்


லாகூரில் நடந்த மாநாட்டில் ஒருவர் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை முஹம்மத் அலி ஜின்னா கடுமையாக எதிர்த்தார்.

அவர் கூறியதாவது ”நான் உயிருடன் இருக்கும் வரை இந்தியாவை உடைக்க முடியாது”. பின்பு தன் முடிவை சில காரணங்களுக்காக மாற்றிக்கொண்டார்.

இந்தியாவில் வாழ்ந்த பல முஸ்லிம்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்பினார்கள். காயிதேமில்லத் தலைமையிலான இந்திய முஸ்லிம் லீக் உருவானது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல துண்டுகளாக பிரிந்து கிடந்தது. சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் அனைத்து பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தியா உருவானது.


இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம் – 
India suthanthira thinam


இந்திய சுதந்திர தினம் அன்று நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்படும். டெல்லியில் (Delhi) உள்ள செங்கோட்டையில் (Red Fort) இந்திய பிரதமர் (Indian Prime Minister) தேசிய கொடி (National Flag) ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இந்திய சுதந்திர தினம்
இந்திய சுதந்திர தினம் ( India suthanthira thinam)

இந்திய சுதந்திர தினம் உரையின் போது இதுவரை செய்துள்ள சாதனைகள் மற்றும் வரும் காலங்களில் செய்யக்கூடிய செயல்களைப் பற்றியும் தன் உரையில் கூறுவார்.

சுதந்திரத்திற்கு தன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினம் அன்று இந்தியா தனது நட்பு நாடு தலைவர்களை இந்திய சுதந்திர தினத்திற்கு விருந்தினர்களாக அழைக்கிறது.


முப்படைகளின் அணிவகுப்பு


இந்திய சுதந்திர தினம் (India suthanthira thinam) போது முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். முப்படைகளின் வீரர்களும் தங்களது திறமைகளை அந்த அணிவகுப்பின்போது செய்து காட்டுவார்.

சுதந்திர தினம் அன்று நாட்டின் பாதுகாப்பிற்கு சேவை செய்த வீரர்களுக்கு வீர பதக்கம் வழங்கப்படும்.


இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம் – மாநிலத்தில்


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி அரசு மரியாதையை ஏற்று கொள்வர். காவல் துறை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் NCC மாணவர்கள் அணிவகுப்பை ஏற்று கொள்வர்.

பிறகு அந்த மாநிலத்தில் மக்களுக்கு தன் அரசின் சாதனைகளை மற்றும் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் உரையாற்றுவார்.

இந்திய சுதந்திர தினம் ( India suthanthira thinam )அன்று சிறப்பு விருதுகளும் மற்றும் பதக்கங்களும்  இந்நாளில் அந்த மாநிலத்தை சிறப்பாக பணியாற்றிய மக்களுக்கு வழங்கப்படும்.

இந்தியா சுதந்திரம் (India suthanthiram thinam) அடைய காரணமாக இருந்த ஒவ்வொரு சுதந்திர போராட்ட  தியாகிகளின் தியாகத்தை நாம் இந்த நாளில் நினைவுகூர்ந்து.
இந்திய சுதந்திர தினம் அன்று அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.

ஜெய்ஹிந்த் (jai hind) …

6 Comments

  1. Pingback: இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது
  2. Pingback: ஆந்திரப் பிரதேசம் - அமராவதி - தெலுங்கு - சந்திரபாபு நாயுடு
  3. Pingback: கிழக்கிந்திய கம்பெனி - East India Company Rule
  4. Pingback: Non Cooperation Movement in Tamil - ஒத்துழையாமை இயக்கம்

Comments are closed.