கூர்க் சுற்றுலா – Trekking in coorg

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் சுற்றுலாத்தலம் கூர்க் சுற்றுலா. கூர்க் என்று அழைக்கப்படும் குடகு மலை (kudagu malai) கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. அந்த மாநிலத்தில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கூர்க் கர்நாடகாவின் காஷ்மீர் என்றும், இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கின்றனர்.

குடகு மலை (kudagu malai) பசுமையான காடுகள், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், பனிபடர்ந்த மலைகள், காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள், வானத்தை தொடும் சிகரங்கள், சலசலவென ஓடும் நீர்வீழ்ச்சிகள் என பல இயற்கை வளங்கள் இந்த குடகு மலை (kudagu malai) கொண்டுள்ளது.

கூர்க் சுற்றுலா
கூர்க் சுற்றுலா

இந்த அழகை காண ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூர்க் சுற்றுலா வருகின்றனர்.குடகு மலையில் வெப்பநிலை 20 டிகிரி குறைவாகவே இருக்கும். நான் இங்கு சுற்றுலா வர சிறந்த காலம் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை. இங்கு நாம் பல வகையான பறவைகளை காணலாம்.

கூர்க் பயணம்

கூர்க் செல்வதற்கு மைசூர் செல்ல வேண்டும். அங்கிருந்து  மடிக்கேரி செல்ல வேண்டும். மடிக்கேரியில் இருந்து பல இடங்கள் தொடங்குகின்றன. மடிக்கேரியில் பல விடுதிகள் இருக்கின்றன. இங்கு இருந்து செல்லும் போது பல கூர்க் சுற்றுலா இடங்கள் காணமுடியும்.

நாம் குடகு மலையில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளிலும் இருக்க முடியும். அங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து விடுதிகள் இருக்கின்றன. இங்கு வீட்டு உணவு நமக்கு கிடைக்கின்றன.

கூர்க் சுற்றுலா இடங்கள் – Trekking in coorg

கூர்க் வரும் பயணிகளுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். பல அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும், சரணாலயம் போன்ற பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன. அவற்றில் சில

தடியாண்டமோல் மலையேற்றம்

புஷ்பகிரி மலையேற்றம்

பிரம்மகிரி மலை மலையேற்றம்

பாராபோல் நதி

மல்லல்லி நீர்வீழ்ச்சி

காபி தோட்டம்

ஓம்காரேஸ்வரர் கோயில்

அப்பி நீர்வீழ்ச்சி

தலக்காவேரி

காவிரி நிசர்கதமா

கோல்டன் கோயில்

ரிசர்வ் காடு மற்றும் யானை முகாம்

ஈருப்பு நீர்வீழ்ச்சி

மடிகேரி கோட்டை

செலாவரா நீர்வீழ்ச்சி

ஹரம்டி அணை

நாகர்ஹோல் தேசிய பூங்கா

புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம்

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.