அதிரப்பள்ளி அருவி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அதிரப்பள்ளி அருவி. இந்த அருவி கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது. 24 மீட்டர் உயரமுள்ள இந்த அருவி சாலக்குடி என்னும் இடத்தில் அருகில் உள்ளது.

கேரளாவில் உள்ள  அருவிகளில் இந்த அருவியை மிகப்பெரியதாகும். இந்த அருவியை இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கின்றனர்.

கேரளா அரசு இந்த அருவியின் அருகில் அணை கட்ட முயற்சி செய்தபோது அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த சர்ச்சை 1990 முதல் 2017 வரை நீடித்தது.

இந்த அருவிக்கு பயணம் செய்வதற்கு தொடர்வண்டி நிலையம் அருகில் சாலக்குடியில் அமைந்துள்ளது.  அந்த நிலையத்திலிருந்து இந்த அருவி 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் நாம் இங்கு வந்தடையலாம்.

விமான நிலையம் கொச்சினில் அமைந்துள்ளது. அங்கிருந்து இந்த அருவிக்கு வருவதற்கு 54 கிலோ மீட்டர் தொலைவாகும் ஆகும். வாடகை வாகனங்கள் அல்லது பேருந்து மூலம் இங்கு வந்தடையலாம்.

இந்த அருவிக்கு இந்தியாவிலிருந்து அனைத்து பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காலங்களில் இங்கு மழை வரத்து அதிகமாக இருக்கும்  அப்போது அங்கு சென்றால் சிறப்பாக இருக்கும்.

தினமும் jungle safari பயணம் இங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. திருச்சூர் மாவட்டம் சுற்றுலா ஊக்குவிக்கும் ஆணையம் மற்றும் அதிரப்பள்ளி இலக்கு மேலாண்மை சபை சேர்ந்து இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்கின்றன. இந்தப் பயணம் சலகமுடி முதல் மாலக்கப்பறை வரை  இருக்கும்.

திரைப்படம்

இந்த அருவி மிக அழகாக இருப்பதால் இது திரைப்படம் எடுக்கும்  இடமாக விளங்குகிறது. பல மலையாளப் படங்கள் இந்த இடத்தில் எடுக்கப்படுகின்றன.

கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் இங்குதான் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக மக்கள் இதை புன்னகை மன்னன் அருவி என்றும் அழைக்கின்றனர்.

இருவர் மற்றும் ராவணன் போன்ற பல  திரைப்படங்களின் பாடல்கள் இங்கு எடுக்கப்படுகின்றன.

வாஷாஹல் நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி அருவிக்கு அருகில் உள்ளது.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தையும் வந்து கண்டு களிக்கலாம்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.