Wayanad Tourist Places in Tamil – வயநாடு சுற்றுலா இடங்கள்

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு வயநாடு சுற்றுலா ( Wayanad Tourist Places in Tamil ). கேரளாவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் வயநாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த இடம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள.

இந்த இடத்திற்கு வயநாடு என்று பெயர் வரக் காரணம் வயல்கள் நிறைந்த நாடு என்பதால். வயநாடு கடல் மட்டத்திலிருந்து 700 – 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் பல பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் இங்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வயநாடு சுற்றுலா
Wayanad Tourist Places in Tamil

வயநாட்டில் பல சுற்றுலா இடங்கள் இருக்கின்றன அவற்றில் சில முக்கியமான இடங்கள் எடக்கல் குகைகள், மீன்முட்டி அருவி, குருவா டிவீப், சூச்சிப்பாறை அருவி, செம்பரா சிகரம்.

வயநாடு சுற்றுலா இடங்கள் – Wayanad Tourist Places in Tamil

எடக்கல் குகைகள்

இந்தக் குகைகள் வயநாடு நகரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் குகைகள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையான கருதப்படுகின்றன.

எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மக்களின் இருப்பின் சுவடுகளாக கருதப்படுகின்றன.

இந்தக் குகைகளில் சுவர்களில் பல தொன்மையான கல்வெட்டுக்கள் பல்வேறு விலங்குகள், மனிதர்கள் மற்றும் ஆயுதங்கள் போன்று உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

எடக்கல் குகைகள் வயநாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் மக்களை கவரக்கூடிய சுற்றுலா இடமாக உள்ளது.

மீன்முட்டி அருவி

மீன்முட்டி அருவி வயநாடு நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கேரளாவின் 2-வது மிகப்பெரிய அருவியாக அறியப்படுகிறது.

இந்த அருவி  300 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவியில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத சூழல் இருப்பதால் இந்த இடத்தை மீன்முட்டி அருவி என்று அழைக்கின்றனர்.

இந்த அருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக 2 கி.மீ ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை கண்டு ரசிக்கலாம்.

செம்பரா சிகரம்

வயநாட்டில் உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம். இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த இடம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக இருப்பதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.

இங்கு டிரெக்கிங்  செய்வதற்கு தேவைப்படும் உபகரணங்களை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வழங்குகிறது. இந்த பயணத்திற்கு வன அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த சிகரத்தில் உச்சியில் மனித இதய வடிவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியை ஹார்டின் ஏரி என்று அழைக்கின்றனர்.

நீலிமலை

நீலிமலை மலையேறும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவரக்கூடிய இடமாக உள்ளது. நீலிமலை செல்வதற்கு பல வழித்தடங்கள் அமைந்துள்ளன. நீலிமலை உச்சியிலிருந்து பார்க்கும்போது நாம் மீன்முட்டி அருவி மற்றும் பல பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்கலாம்.

பாணாசுர சாகர் அணை

வயநாட்டில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கபினி ஆற்றின் துணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.

இந்தியாவின் மிக பெரிய கரைத்தடுப்பு அணையாகவும், ஆசியாவில் 2-வது  மிக பெரிய கரைத்தடுப்பு அணையாகவும் திகழ்கிறது.

பான்சுரா சாகர் அணைத் திட்டம் உள்ள இடம் தான் பான்சுரா சிகரத்திற்கு ஏறுவதற்கான தொடக்க இடமாக உள்ளது. இங்குள்ள பார்க்கத்தக்க முக்கிய அம்சங்கள், நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதிகளாகும்.

ஃபாண்டம் ராக்

இந்தப் பாறை  இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகி இருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். இங்கு வாழும் மக்கள் இந்தப் பாறையை “சீங்கேரி மலா” அல்லது “தலைப்பாறை” என்று அழைக்கின்றனர்.

குருவா டிவீப்

இந்த செழிப்பான ஆற்றுத் தீவுத்திட்டு பல பசுமையான மரங்களைக் கொண்ட  அடர்ந்த சோலை போன்று காட்சியளிக்கிறது. இங்கு பல வகையான தாவரங்கள் மற்றும் பறவைகள் இந்த இடத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன.

பல மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை செடிகள் மற்றும் மலர் தாவரங்கள் போன்றவற்றை பயணிகள் இங்கு காணலாம்.

சூச்சிப்பாறை அருவி

வயநாடு நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவியை அடைவதற்கு இரண்டு கிலோமீட்டர் நடைபயணம் மூலம் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

செயின் மரம்

வயநாட்டில் முக்கியமான சுற்றுலாத் தலமாக இந்த இடம் விளங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  பொறியாளர் ஒருவர் ஆதிவாசி இளைஞனுடன் இந்த இடத்தை மிகவும் சிரமப்பட்டு அடைந்துள்ளார்.

பிறகு திரும்பிச் செல்லும் வழியில் அந்த பொறியாளர்  இந்த இடத்தை கண்டுபிடித்த பெருமை தனக்கு மட்டுமே சேர வேண்டும் என்று அந்த ஆதிவாசி இளைஞனை கொன்றுவிட்டார்.

அந்த இளைஞனின் ஆவி இந்த இடத்திற்கு வருபவர்களை அச்சுறுத்தியவாறு இருந்துள்ளது. ஒரு பூசாரி தன் சக்திகளை கொண்டு அந்த ஆவியை  செயின் மூலம் அருகில் இருந்த அத்தி மரத்தில் கட்டி வைத்துள்ளார்.

அந்த அத்தி மரத்தை செயின் மரம் என்றும் அழைக்கின்றனர். இன்றும் அந்த மரத்தின் செயின் தொங்குவதைக் காணலாம்.

வயநாடு வனவிலங்கு சரணாலயம்

வயநாடு வனவிலங்கு சரணாலயம் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலிருந்து சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பலவகையான வன விலங்குகளை நீங்கள் காணலாம்.

சுல்தான் பத்தேரி

வயநாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இந்த இடம் விளங்குகிறது. திப்பு சுல்தான் தன் பீரங்கிப் படையை இங்குள்ள ஜைன  கோயிலில் நிறுத்தி இருந்தார். இதன் காரணமாகவே இந்த இடத்திற்கு சுல்தான் பத்தேரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.