மெரினா கடற்கரை – சென்னை மெரினா கடற்கரை – The Marina Chennai

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் சுற்றுலாத்தலம் சென்னை மெரினா கடற்கரை ( The marina Chennai beach ). சென்னை உள்ள முக்கியமான சுற்றுலா தலமாக மெரினா கடற்கரை விளங்குகிறது.

மெரினா கடற்கரை ( Marina beach ) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரை 13 கிலோமீட்டர் நீளமாகும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை

மெரினா கடற்கரையை ( Marina beach ) ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் நாள்தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

உருவச்சிலைகள்

 • அன்னி பெசண்ட் சிலை
 • ஔவையார் சிலை
 • பாரதிதாசன் சிலை
 • பாரதியார் சிலை
 • பக்கிங்ஹாம் கால்வாய் மீனவர்கள் சிலை
 • இளங்கோ அடிகல் சிலை
 • கவியரசர் கம்பர் சிலை
 • கண்ணகி சிலை
 • மகாத்மா காந்தி சிலை
 • சுபாஷ் சந்திரபோஸ் சிலை
 • விவேகானந்தர் சிலை
 • உழைப்பாளர் சிலை
 • திருவள்ளுவர் சிலை
 • திலகர் டைடால் பிளேக்
 • காமராஜர் சிலை
 • சிவாஜி கணேசன் சிலை

நினைவிடங்கள்

 • சி. என். அண்ணாதுரை நினைவிடம்
 • எம். ஜி. ராமச்சந்திரன் நினைவிடம்
 • ஜே. ஜெயலலிதா நினைவிடம்
 • எம். கருணாநிதி நினைவிடம்

போக்குவரத்து

மெரினா கடற்கரையை ( Marina Beach ) ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன.

அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.