பிக் பாஸ் – பிக் பாஸ் எலிமினேஷன்

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைக் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16  பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். வெளியேற்றம் மக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் அமையும். இந்த வாக்கெடுப்பு online  மற்றும் missed call மூலம் பதிவு செய்யப்படுகின்றது.

வாரத்தின் முதல் நாளில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 சக போட்டியாளரின் பெயரை வெளியேற்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்த பரிந்துரையின் போது வீட்டின் அந்த வார தலைவரை பரிந்துரை செய்ய முடியாது. பிக் பாஸ் சில போட்டியாளர்களை காப்பாற்ற அல்லது வெளியேற்றத்திற்கு பரிந்துரை செய்வார். இந்த பரிந்துரை சென்ற வாரம் நடந்த போட்டிகளில் அடிப்படையில் அமையும்.

இந்த வெளியேற்றத்தின் முடிவை நடிகர் கமல் ஞாயிறன்று அறிவிப்பார். இந்த வாரம் வெளியேற்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள்.

  1. மும்தாஜ்
  2. சென்ராயன்
  3. பாலாஜி
  4. மஹத்

இந்த வாரம் இவர்களிலிருந்து மஹத் வெளியேற்றப்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு தனியார் இணையதளத்தின் முடிவும் இதையே காட்டுகிறது. அந்த இணையதளத்தின் மஹத் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe For Latest Updates

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Sutrula Thalangal will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.