திருப்பூர் குமரன் – கொடி காத்த குமரன்

திருப்பூர் குமரன் தன்னுடைய 28 வயதில் தன் இன்னுயிரை நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்தவர். நாம் இந்த பதிவில் இவரைப் பற்றி காணலாம்.

இவர் 1904 ஆம் ஆண்டு 4ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும்  கிராமத்தில் நாச்சிமுத்து மற்றும் கருப்பாயி அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

இவர் வறுமை காரணமாக தன் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின் தன் தந்தையுடன் இணைந்து கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தார். தன்னுடைய 19வது வயதில் ராமாயி என்னும் பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.

திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன்

கைத்தறி தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் மாற்று வேலை தேடி  திருப்பூர் சென்று இவரது குடும்பம் குடியேறினார்கள்.

காந்தியடிகளின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அவர் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். 1932 ஆம் ஆண்டு காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

 தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் பெரும் காயமுற்று திருப்பூர் குமரன் நம் தேசிய கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி11 தன் இன்னுயிரை நீத்தார்.  இதன் காரணமாகவே இவர் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தை சிறப்பிக்கும் வகையில்  திருப்பூரில் குமரன் நினைவகம் அமைத்துள்ளது.

இந்திய அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு இவரது  நூறாவது பிறந்தநாள் அன்று சிறப்பு தபால் தலை இவரது நினைவாக வெளியிட்டது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *