தாஜ் மஹால் – Taj Mahal

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தாஜ் மஹால் (Taj Mahal). உலகப் புகழ் பெற்ற காதலின் சின்னமாக தாஜ் மஹால் கருதப்படுகிறது. தாஜ் மஹால்
(Taj Mahal) ஆக்ராவில் அமைந்துள்ளது.

முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும்.

ஏழு உலக அதிசயங்களின் (Seven wonder of World) புதிய பட்டியலில் தாஜ் மஹாலும் இடம்பெற்றுள்ளது. தாஜ் மஹால் (Taj Mahal) முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் மன்னனான ஷாஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள்.

பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின.

முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின.

தாஜ்மகால் (Taj Mahal), பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது.

கறுப்பு நிறத் தாஜ் மஹால்

தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான். அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி.

ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை.

ஆனால் அதன் அமைப்புகள், கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் (Taj Mahal) கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.

ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து. பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார்

என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.

தாஜ்மஹால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து

சுவாமி விவேகானந்தர் தாஜ் மஹாலைப் பார்த்த போது கூறிய கருத்து: இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்.

இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe For Latest Updates

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Sutrula Thalangal will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.