குலோப் ஜாமூன் செய்முறை

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு குலோப் ஜாமூன் செய்முறை.

தேவையான பொருட்கள்

குலோப் ஜாமுன்  மாவு  –   ½ கிலோ

மைதா மாவு     –  4 தேக்கரண்டி

சர்க்கரை  –   ¼ கிலோ

ஏலக்காய்   –   2 – 4

செய்முறை

முதலில் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும். 

சர்க்கரை பாகு செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் ஏலக்காயை சேர்க்கவும்.   சர்க்கரை பாகுவில் பதம் ½ கம்பி அளவு இருக்க வேண்டும்.

குலோப் ஜாமூன் செய்முறை

ஒரு பாத்திரத்தில் குலோப்ஜாமூன் மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து தேவையான தண்ணீரைச்  சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு நாம் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகுவில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு நன்கு ஊறவிடவும். பின்பு குலோப்ஜாமுன் எடுத்து பரிமாறவும்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *