குதுரேமுக் சுற்றுலா

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது குதுரேமுக் சுற்றுலா. இந்த இடம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இந்த சுற்றுலா இடம் மலையேற்றத்துக்கு மிகச் சிறந்ததாக விளங்குகிறது.

குதுரேமுக் சுற்றுலா இடங்கள்

 • குதுரேமுக் சிகரம் மலையேறுதல்
 • ஹனுமங்கண்டி நீர்வீழ்ச்சி
 • குதுரேமுக் தேசிய பூங்கா
 • கல்சா கோவில்கள்
 • கங்கா மூலா
 • லகியா அணை

குதுரேமுக் சிகரம் மலையேறுதல்

குதுரேமுக் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1894 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரம் இங்கு வரும் மலையேற்றம் செய்யும்  சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவருகிறது.

இந்த இடத்தில் உள்ள விலங்குகளும் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தாவரங்களும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்க்கிறது. இந்த குதுரேமுக் சிகரம் குதுரேமுக் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.

இங்கு வானிலை 18 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும்.  இந்த மலையேற்றம் செய்வதற்கு ஒரு நாள் தேவைப்படுகிறது. இரவு மலையேற்றத்திற்கு இங்கு அனுமதி கிடையாது. இந்த மலையேற்றத்தில் சிரமமான நிலை: மிதமான – கடினம்.

குதுரேமுக் தேசிய பூங்கா

கர்நாடகாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காவாக குதுரேமுக் தேசிய பூங்கா இருக்கிறது. இந்த பூங்காவில் உயர்ந்த மலைப்பாறைகள், தாவரங்களும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகான புல்வெளிகள் ஆகியவை உள்ளன.

இந்த தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளை இங்கு மிகவும் கவரக்கூடிய  இடமாக உள்ளது.இந்தப் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் தேவைப்படுகிறது.

ஹனுமங்கண்டி நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு குதுரேமுக் அடர்ந்த காடு வழியாக பயணிகள்  நடந்து செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் நீராடுதல் மூலம் உடலில் புத்துயிர் பெறுகிறது, தசைகளில் உள்ள வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கல்சா கோவில்கள்

இந்த நகரம் குதுரேமுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பிரபலமான பல கோயில்கள் உள்ளன

 • காலேஷ்வரர் கோயில்
 • கிரிஜும்பா கோயில்
 • ஹனுமான் கோயில்
 • வெங்கடராமனா கோயில்
 • ரஞ்சல் மஹாலட்சுமி கோயில்
 • வசிஷ்ட ஆசிரமம்
 • ஸ்ரீ சந்திரநாத சுவாமி கோயில்

ஸ்ரீ காலேஷ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கர்நாடக அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

கங்கா மூலா

இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1458 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை வராக பர்வதம் என்றும் அழைக்கின்றனர். இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் ஒன்றாக உள்ளது. துன்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆறுகளும் இந்த இடத்தில் இணைகிறது.

லகியா அணை

இந்த அணை குதுரேமுக் இரும்பு தாது நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த அணை பாத்ரா நதியின் துணை நதியான லகியா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. குதுரேமுக் தேசிய பூங்காவிற்குள்  இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் ஒரு பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.