கர்ணன் முற்பிறவி – Karna

இந்த பதிவில் நாம் கர்ணன் (Karna) முற்பிறவி பற்றி காணலாம். கர்ணன் மகாபாரதத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவர். கர்ணன் குந்தி  சூரிய பகவானிடமிருந்து பெற்ற வரம் ஆவார்.

கர்ணன் அனைத்தும் பலம் இருந்தபோதும் பல துன்பத்திற்கு ஆளானான். துன்பத்திற்கு காரணம் கர்ணன் தன் முற்பிறவியில் செய்த சில தீய செயல்களே ஆகும்.

கர்ணன் (Karna)  தன் முற்பிறவியில் ஒரு அசுரனாக இருந்தான். அவன் பிரம்மதேவரிடம் தனக்கு 1000  கவச குண்டலங்கள் வரமாகப் பெற்று கொண்டான். ஒரு கவச குண்டலத்தை அழிக்க 12 வருட தவம் மற்றும் 12 வருடம் அவனிடம் யுத்தம் செய்ய வேண்டும். இதனால் அவனை அளிப்பது மிகவும் கடினமாகும்.

அவன் தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்கள் அனைவரையும் மிகவும் துன்புறுத்தி வந்தான்.  தேவர்கள் விஷ்ணுவிடம் இந்த அசுரனை அழிக்க முறையிட்டனர்.

விஷ்ணு நர மற்றும் நாராயணனாக அவதாரம் மேற்கொண்டு ஒருவர் 12 வருடம் தவமும் மற்றொருவர் 12 வருடம் அவனிடம் யுத்தம் செய்து வந்தனர்.

இருவரும் மாறி மாறி அவனிடம் யுத்தம் செய்தனர். இப்படி இருவரும் அவனிடம் யுத்தம் செய்து அவனுடைய 999  கவச குண்டலத்தை அளித்தனர். பிறகு அவன் இருவரிடமிருந்தும் தப்பி சூரிய லோகத்தில் தஞ்சம் அடைந்தான்.

இவனே கர்ணனாக மறு ஜென்மம் எடுத்தான். இவன் செய்த பல கெட்ட செயல்களுக்காகவே இப்பிறவியில் அவன் பல துன்பங்களை அனுபவித்தான்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.