ஊட்டி சுற்றுலா – places to visit in ooty – ooty tourism

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஊட்டி சுற்றுலா ( ooty tourism ) தளங்களின் பட்டியல்.  ஊட்டி நீலகிரியில் அமைந்திருக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும் இது மலைகளின் அரசி ( Queen of hills ) என்று அழைக்கப்படுகிறது.  வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி சுற்றுலா

ஊட்டி சுற்றுலா தலங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

நீலகிரி மலைரயில் ( Nilgiri Mountain Railway )

நீலகிரி மலை ரயில் பிரிட்டிஷார் 1908 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இந்த ரயில் சதர்ன் ரயில்வேவால் இயக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் rack railway இது ஒன்று மட்டுமே. இந்த ரயில் பயணம் மிகவும் பிரபலம்.  ரயில் பயணத்தின்போது மண் சரிவு ஏற்படும் ரயில் இயக்குவது சற்று தாமதமாகும். அந்த தடையை நீக்கி விட்ட பின்னே ரயில் இயங்கும்.

ஊட்டி ஏரி – Ooty Lake

ஊட்டி ஏரி – Ooty Lake மிகவும் பிரபலமான இடம்.  அனைத்து சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடம்.  ஊட்டி ஏரி மொத்தம் 62 ஏக்கர் பரப்பு ஆகும். இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.   இந்த ஏரி மனிதனால் உருவாக்கப்பட்டது. ஜான் சுல்லிவன் என்பவர் இந்த ஏரியை உருவாக்கியவர்.

கோடை காலங்களில் இங்கு படகு பந்தயம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு. இங்கு தோட்டம் , மினி ரயில் மற்றும் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது.

தாவரவியல் பூங்கா – Ooty Botanical Gardens

ஊட்டி தாவரவியல் பூங்கா ( Ooty Botanical Gardens ) நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அமைந்துள்ளது. இந்தத் தாவரவியல் பூங்கா  1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவின் மொத்த பரப்பு 22 எக்டேர்.

இந்தப் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2500 கிலோ மீட்டர்கள் வரை இருக்கும். இந்தப் பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம் பராமரிக்கப்படுகிறது. இந்தப் பூங்கா மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்

ரோஸ் கார்டன் -Rose Garden

ஊட்டியில்  உள்ள சில முக்கியமான இடங்களில்  ரோஸ் கார்டன் ( Rose Garden ) உண்டு. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தத் தோட்டம்  ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 4 எக்டேர் ஆகும்.

த்ரெட் கார்டன் – Thread Garden

இதன் பேரில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்  இங்கு இருக்கும் அனைத்து செடிகள் மற்றும் பூக்கள்  நூலினால் ஆனவை. இந்த தோட்டம் ஊட்டியில் மிகவும் பிரபலமானவை. இந்த தோட்டத்தில் உள்ள அனைத்து செடி மற்றும் பூக்கள் கையினால் உருவாக்கப்பட்டவை.  இந்தத் தோட்டம் மற்ற இடத்தை காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது ஏனெனில் இங்கு உள்ள செடி மற்றும் பூக்கள் மனிதனின் கடின உழைப்பை காட்டுகிறது.

டால்பின்’ஸ் மூக்கு – 

டால்பின் மூக்கு ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேலான  உயரம் கொண்டது.

குன்னூரில் இருந்து பத்து கிலோமீட்டர்  தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம் டால்பின் மூக்கு போல் இருப்பதால் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.  இந்த இடத்தில் இருந்து காணும் பொழுது பல அற்புதமான காட்சிகள் கிடைக்கின்றன மற்றும் இங்கிருந்து கோத்தகிரி அருவி விழுவதை காணலாம்.

கல்பட்டி நீர்வீழ்ச்சி 

இந்த சுற்றுலா இடம்  ஊட்டியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  மைசூர் செல்லும் வழியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கல்பட்டி கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர்  தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

எமரால்டு ஏரி

இந்த ஏரி எமரால்டு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த ஏரி ஊட்டி நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்த ஏரி மிகவும் முக்கியமான சுற்றுலா தளம் ஆகும்.  இங்கு பல்வேறு மீன்களும் அறிய வகை பறவைகளும் காணமுடியும். இந்த ஏரியை சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை பொருட்களை வாங்கி செல்ல முடியும்.

காம்ராஜ் சாகர் ஏரி – Kamaraj Sagar Dam

காம்ராஜ் சாகர்  ஏரி ஊட்டி சுற்றுலா தளங்களின் பட்டியல் ஒன்று. இந்த ஏரி ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மிகவும் பொழுதுபோக்கு மற்றும் திரை படங்கள் எடுக்கும் இடமாக உள்ளது.

அண்ணாமலை கோயில்

அண்ணாமலை முருகன் கோயில் மிகவும் முக்கியமான இடம்  நீலகிரியில். இங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து முருகனை வழிபட்டு செல்வர்.

மெழுகு அருங்காட்சியகம்

ஊட்டியில் அமைந்துள்ள மெழுகு அருங்காட்சியகம் மிகவும் பிரபலமானவை.  இங்கு அமைந்துள்ள மெழுகுச் சிலைகள் இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது

ட்ரூக் கோட்டை

ட்ரூக் கோட்டை இதனை பகாசுர மலைக்கோட்டை என்றும் அழைக்கின்றனர்.  இந்த கோட்டை குன்னூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இது வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. இந்த கோட்டை திப்பு சுல்தான் பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது  இந்த கோட்டையின் ஒரு சுவர் மட்டுமே உள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய இடமாக உள்ளது. 

தொட்டபெட்டா சிகரம் – 
Doddabetta Peak

ஊட்டி சுற்றுலா தளங்களின் பட்டியல் தொட்டபெட்டா ( Doddabetta ) ஒன்று. தொட்டபெட்டா சிகரம் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தளம்.  பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மலைத்தொடரில் உள்ள மலைகளில் தொட்டபெட்டா சிகரம்
( Doddabetta Peak ) உயரமானது. தொட்டபெட்டா
( Doddabetta ) என்று பெயர் வர காரணம் தொட்டா என்றால்  பெரிய, பெட்டா என்றால் மலை என்று கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

பைக்காரா ஏரி – Pykara

பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும். ஒரு ஆற்றின் பைக்காரா அருவி 61 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் தொடர் அருவியாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இந்த அருவி ஊட்டி  சுற்றுலா தளங்களில் பட்டியல் இருக்கிறது.

முதுமலை – Mudumalai National Park

முதுமலை தேசிய பூங்கா  ( Mudumalai National Park ) மிகவும் முக்கியமாக சுற்றுலா இடம்.  கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா  1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதுவே தென்னிந்தியாவில் முதல் வனவிலங்கு காப்பகம் ஆகும். இங்கு பல விலங்கினங்கள் வாழ்கின்றன. இந்த காப்பகம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe For Latest Updates

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Sutrula Thalangal will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.