இந்திய சுதந்திர தினம் – Independence day

இந்திய சுதந்திர தினம் (Independence day) ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது விடுதலை அடைந்த நாளை நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்.  

இந்திய சுதந்திர தினம் (Independence day) அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்படும். டெல்லியில் (Delhi) உள்ள செங்கோட்டையில் (Red Fort) இந்திய பிரதமர் (Indian Prime Minister) தேசிய கொடி (National Flag) ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இந்திய சுதந்திர தினம்
இந்திய சுதந்திர தினம் (Independence day)

அந்த உரையின் போது இதுவரை செய்துள்ள சாதனைகள் மற்றும் வரும் காலங்களில் செய்யக்கூடிய செயல்களைப் பற்றியும் தன் உரையில் கூறுவார்.

இந்திய சுதந்திரத்திற்கு தன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தனது நட்பு நாடு தலைவர்களை இந்திய சுதந்திர தினத்திற்கு விருந்தினர்களாக அழைக்கிறது.

இந்திய சுதந்திர தினத்தின்
(Independence day) போது முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். முப்படைகளின் வீரர்களும் தங்களது திறமைகளை அந்த அணிவகுப்பின்போது செய்து காட்டுவார்.  நாட்டின் பாதுகாப்பிற்கு சேவை செய்த வீரர்களுக்கு வீர பதக்கம் வழங்கப்படும்.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி  அந்த மாநிலத்தில் மக்களுக்கு தன் அரசின் சாதனைகளை மற்றும் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் உரையாற்றுவார்.

சிறப்பு விருதுகளும் மற்றும் பதக்கங்களும்  இந்நாளில் அந்த மாநிலத்தை சிறப்பாக பணியாற்றிய மக்களுக்கு வழங்கப்படும்.

இந்தியா சுதந்திரம்
(Independence of India) அடைய காரணமாக இருந்த ஒவ்வொரு சுதந்திர போராட்ட  தியாகிகளின் தியாகத்தை நாம் இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.

ஜெய்ஹிந்த் (jai hind) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe For Latest Updates

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Sutrula Thalangal will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.