ஆந்திரப் பிரதேசம் – Andhra Pradesh

ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh) இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் ஒன்றாகும்.இந்தியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவு (162,970 கிமீ2) அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். 2011 மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh)  பத்தாவது பெரிய மாநிலமாகும். விசாகப்பட்டிணம்ஆந்திராவில் மிக பெரிய நகரம்ஆகும்.

ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்

தலைநகரம்

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபின்பு பழைய ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத் (Hyderabad) தெலுங்கானா (Telangana) பகுதி சேர்க்கப்பட்டது. இதற்குபின்னர் புதிய தலைநகராக அமராவதிநகரை அமைக்க, 22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மொழி

தெலுங்கு (Telugu) மொழி இங்கு பெரும்பாலான மக்களால்பேசப்படுகிறது. இந்த மொழி திராவிடமொழிகளில் ஒன்றாகும். தெலுங்கு மொழி இங்கு பெரும்பாலானமக்களால் பேசப்படுகிறது. இந்த மொழி திராவிடமொழிகளில் ஒன்றாகும்.

இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம்ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டுவருகிறது. உலகில் அதிக அளவில்பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்குமொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர்.

எல்லைகள்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தின் எல்லைகளாக வடக்கில் தெலுங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் கிழக்கில் வங்காளவிரிகுடாவும் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. இந்திய மாநிலங்களில்இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது.

நீர் வளங்கள்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தின் நீர் வளங்களாக ஆறுகள் மற்றும் அணைகள் விளங்கின்றன. அவை கோதாவரி ஆறு, கிருஷ்ணாஆறு, ஸ்ரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம்திட்டம்.

தொழில்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய்,கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுகின்றது. சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு இங்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.  இதுமட்டும்இல்லாமல் இங்கு கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மற்றும் காக்கிநாடாதுறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மூலமும்வருவாய் வருகிறது.

மதங்கள்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தின் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர்.கிரிஸ்துவம், புத்தம், சீக்கியம், ஜெயின் போன்ற மதங்களும் இங்கு கடைப்பிக்கப்படுகிறது.

அரசியல்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளும்; 25 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, பிஜேபி இங்கு பிரதான கட்சி கழக உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக  உள்ளார்.

கலாசாரம் மற்றும் சின்னங்கள்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் கருநாடக இசை முக்கிய பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய நாட்டியமாக குச்சிப்புடி நடனம் உள்ளது. ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் சின்னங்கள்:

முத்திரை – பூர்ணா கும்பம்

பாடல் – மா தெலுங்கு தாலிகி

விலங்குகள் – கலைமான்

பறவை  – பச்சைக்கிளி

மலர் – மல்லிகை

மரம் – வேப்பமரம்

வழிபாட்டுத் தலங்கள்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்

விஜயவாடா கனகதுர்கை கோயில்

பயணம்

விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதிவிமான நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.